கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை
வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை
நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன்
கோபிந்தராஜா நேற்று வெள்ளிக்கிழமை மாலை அறிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்தேர்ச்சையாக மேற்கொண்டு வரும் குழப்பங்கள் காரணமாக இந்த நிலைமை தோன்றியுள்ளது.கடந்த 30 ஆம் திகதி முதல் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்ற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகிறது.
இன்று மாலை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்களால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாகவும், பல்கலைக் கழக விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் சனிக்கிழமை (03.05.2014) காலை ஏழு மணிக்கு முன்னர் தங்களது விடுதிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு சுகாதார விஞ்ஞான பராமரிப்புப் பீடம், திருகோணமலை வளாகம், கல்லடி சுவாமி விபுலாநந்த இசை நடனக் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றின் அனைத்துக் கற்கைகளும் தங்கு தடையின்றி இடம்பெறும் என்றும் உப வேந்தரின் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply