சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஜாகீர் ஹூசேனுக்கும் தங்களுக்கும்
எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம்
மறுத்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஜாகீர்ஹூசேன்
என்பவர் சிக்கினார். அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளி. அவரை
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவில் நாசவேலைகளுக்காக
உளவு பார்க்க அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது.சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் உளவு அமைப்பு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததையும் ஜாகீர்ஹூசேன் தெரிவித்திருந்தான். இந்நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கும் தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த எந்த ஒரு அதிகாரியும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply