blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, September 11, 2014

காத்தான்குடியில் எட்டுவயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

காத்தான்குடியில் எட்டுவயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைமட்டக்களப்பு காத்தான்குடி – மஞ்சந்தொடுவாய் பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணாமற்போயிருந்ததாக கூறப்படும் சிறுமி உரப் பையில் கட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பதியலாவை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►