என்னுடன் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமா? அவர் எனக்கு எவ்வகையிலும் ஒரு சவாலாக இருக்கவே முடியாது.
உண்மையில் இத்தேர்தலில் நான் சந்திரிக்காவுடன்தான் போட்டியிடுகின்றேன். அதுவும் சந்திரிகா, மங்கள கூட்டு அணியுடன்தான் போட்டியிடுகிறேனே தவிர மைத்திரியுடன் அல்ல. என்னைப் பொறுத்தவரையில் மைத்திரிபால சிறிசேனவை நான் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.
அவர் எனக்கு எவ்வகையிலும் போட்டியும் இல்லை. மைத்திரிபால எனக்கு ஒரு சவாலும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் தன்னைச் சந்தித்த நாட்டிலுள்ள தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் பிரதான இலத்திரனியல் ஊடக முக்கியஸ்தர்களிடையே பேசுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஒருவேளை ரணில் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அது எனக்கும் ஓரளவாவது போட்டியாக இருந்திருக்கும் எனக் கூறலாம்.
என்னைப் பொறுத்தவரையில் இப்போதுள்ள எதிரணில் ரணிலே உண்மையில் போட்டியிடத் தகுதியானதொருவர் என்பது எனது கருத்து. ஏனெனில் அவருக்கு மக்களிடையே அதாவது அவரது கட்சியில் ஓரளவு ஆதரவு உள்ளது.
அவருக்கென்று ஒரு சிறு வாக்கு வங்கியும் உள்ளது. ஆனால் அந்த வாக்கு வங்கி ரணில் கூறினாலும் மைத்திரிக்கு மாறி விழாது. காரணம் அது யானைக்கும், ரணிலுக்கும் மட்டுமே வாக்களிக்கப் பழகிய குழுவாகும்.
திடீரென கட்சி மாறி அக்கட்சியின் தலைமையை அவதூறாக விமர்ச்சிக்கும் எதிரணியைச் சேர்ந்த ஒருவருக்கு அக்குழுவினர் ஒருபோதும் வாக்களிக் மாட்டார்கள். அதனால் அக்குழுவினர் கூட மாற்று வழியின்றியும், எனது சேவையை மதித்தும் என்னுடன் இணைந்துள்ளனர். இதுவே உண்மை நிலை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் நாட்டிலுள்ள சிங்கள மக்களில் அதிக பெரும்பான்மையினருடன் பெரும்பான்மையான தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் எம்முடனேயே உள்ளனர்.
அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. கட்சிகள் சில எதிராக நின்றாலும் அல்லது இன்னமும் முடிவெடுக்காது இருந்தாலும் அம்மக்கள் என்னுடன் உள்ளதை அவர்களால் தடுக்க முடியாது.
அதனால் அவர்கள் வேறு வழியின்றி என்னுடனேயே நிச்சயம் இணைவர் எனவும், அவ்வாறு அக்கட் சிகளின் தலைமைகள் முடிவெத்தால் அவர்கள் தாம் சார்ந்த மக்களாலேயே தனிமைப்படுத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, December 7, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply