ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் மொனராகல மாவட்டத்தில் பெண்களுக்கான கைப் பைகளை அவரின் விருப்பத் தேர்வு இலக்கத்தை அச்சிட்டு விநியோகித்துள்ளார் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
இந்நிலையிலேயே மொனராகல மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இவ்வாறு பெண்கள் பயன்படுத்தும் 2 இலட்சம் கைப் பைகளில் தேர்தலில் அவரின் விருப்பு இலக்கத்தை அச்சிட்டு விநியோகித்துள்ளார் என்று அந்த அமைப்பகள் தெரிவித்துள்ளன.
இந்தக் கைப் பைகள் மௌதகம, நொச்சியாகம பகுதிகளில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மொனராகல மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான 'கபே' இன் தலைவர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
அத்துடன் இது தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, September 15, 2014
பெண்களுக்கான 2 இலட்சம் கைப் பைகளை விநியோகித்தாராம் ஆளுங்கட்சி வேட்பாளர்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply