ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
சிரியாவில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் ஜேம்ஸ் போலோ என்ற அமெரிக்க பத்திரிகையாளரை கடத்திச் சென்று பிணைக்கைதியாக வைத்திருந்த அவர்கள், சமீபத்தில் அவரை கழுத்தை அறுத்துக் கொன்றனர்.
இந்த காட்சியை அவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடவும் செய்தார்கள். இந்த செயலை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வன்மையாக கண்டித்து உள்ளார்.
அமெரிக்க பத்திரிகை நிருபர் ஸ்டீவன் ஷாட்ஆப் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு யூலை மாதம் மாயமானார். அவரும் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளார், ஸ்டீவன் சாட்லோப் ஐ.எஸ். பிணைக்கைதியாக இருந்து வருகிறார்.
ஈராக்கில் தங்களுக்கு எதிரான விமான தாக்குதலை நிறுத்தாவிட்டால் அவரையும் கொன்று விடுவோம் என்று அமெரிக்காவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில், தனது மகனின் உயிரை காப்பாற்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஸ்டீவன் சாட்லோப் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார், எனது மகன் உங்களது கையில் உள்ளான், நீங்கள் கலிப், உங்களால் மன்னிப்பு வழங்க முடியும்.
என்னுடைய மகனை உயிருடன் விட்டுவிடுங்கள் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எனது மகனின் உயிரை காப்பாற்ற உங்களது அதிகாராகத்தை பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டீவன் சாட்லோப் தாயார் சாட்லோப் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில்
No comments:
Post a Comment
Leave A Reply