blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, August 13, 2014

பலாத்காரத்தில் ஈடுபடும் 16 வயது குற்றவாளியை சிறுவனாகக் கருத முடியாது

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும்இ 16 முதல் 18 வயதுக்குட்பட்டோரையும் பெரியவர்களாகக் கருதும் வகையிலான சட்டமூலத்தை இந்திய மக்களவையில் பெண்கள்
மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிமுகம் செய்துவைத்தார்.

தற்போதுள்ள சட்டப்படி 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறுவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். 

அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் வரைதான் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அவர்கள் இருக்க முடியும்.

இந்நிலையில்இ இந்தியாவில் தற்போது நடைபெறும் பெரும்பாலான பலாத்கார குற்றங்களில் 18 வயதிற்கும் குறைவானோர் அதிகம் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்துஇ சிறுவர் நீதி பேணல் மற்றும் பாதுகாப்பு சட்டம்-2014 என்ற சட்டமூலத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தயாரித்துள்ளது.

இதன்படிஇ கொலைஇ பலாத்காரம் உள்ளிட்ட கொடுஞ்செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதிற்கிடையேயான வயதுள்ள சிறுவர்களை எந்த சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் சிறுவர் நீதி வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளியை சிறுவர் நீதிமன்றத்திற்கு அனுப்புவதா அல்லது வழக்கமான நீதிமன்றத்திற்கு அனுப்புவதா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம்இ 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவெடுத்தாலும் கூட குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அளிக்க முடியாது.


உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►