blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, August 13, 2014

முஸ்லிம்கள் அவதானமாக செயல்பட வேண்டியது காலத்தின் தேவை

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே பிரிவினையையும் மோதல்களையும் உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம்களை இந்த அரசில் இருந்து வெளியேற்றி அதனூடாக இந்த
சமூதாயத்தை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் யாரும் இல்லாத அநாதைகளாக ஆக்கி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீரழித்து பிச்சைக்கார சமூகமாக மாற்றுவதற்கு இந்த இனவாத சேனாக்கள் சூழ்ச்சி  கொண்டிருக்கிறார்கள். 

இந்த நேரத்திலே நாங்கள் புத்திசாதூரியமாக சிந்திக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது என்று வர்த்தக ஏற்றுமதித்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபையின் நகரபிதா டாக்டர் ஹில்மியின் அயராத முயற்சியின் பயனாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிண்ணியாவில் நிர்மாணிக்கப்பட்ட பொழுதுபோக்கு மரக்கறி கடைத்தொகுதி றஹ்மாணியா சிறுவர் பூங்கா கட்டையாறு வீதி ஆகியன உத்தியோக பூர்வமாக திறந்து மக்களிடம் அவற்றை கையளிக்கும் வைபவத்தில் அதிதியாக கலந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

தற்போது இந்த நாட்டில் ஒரு சில குழுவினரால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில்  சிலருக்கு ஏன் இவர்கள் தங்களுடைய அமைச்சை விட்டுவிட்டு எதிர்க்கட்சியில் போய் அமரவில்லை என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது. 

முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக அரசை விட்டும் வெளியேற வேண்டும் என்ற ஆதங்கம் இளைஞர்களுக்கு இருக்கின்றது. 

எனினும் உணர்ச்சிவசப்பட்டு அரசியல் செய்வதை விடுத்து நிதானமாக காய் நகர்த்த வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

முஸ்லிம் சமூதாயத்தின் மானமும் இந்த சமுதாயத்தினுடைய பொருளாதாரமும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து நாங்கள் ஊவா மாகாண சபை தேர்தலிலே ஒன்றுபட்டு ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றோம்.

ஒரு சகாப்தத்துக்கு மேலாக ஊவாவிலே ஒரு முஸ்லிம் பிரதிநிதித்தும் இல்லை என்ற ஏக்கத்திலே இருந்த அந்த சமூதாயம் எங்களுக்கு பிரதிநிதித்துவம் பெற்று தாருங்கள் என்று எங்களை வேண்டினார்கள். 

எங்களுக்காக ஒன்றுபடுங்கள் என்று வேண்டினார்கள். அரசியல் ரீதியாக எங்களை விட்டும் தூரமாக்கப்பட்டிருந்த அந்த சமூதாயத்துக்காக இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருதி ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம்.

என்னுடைய கட்சிக்காரர் வெல்ல வேண்டும் என்பதல்ல எங்களுடைய நோக்கம். அந்த சமூகம் ஒரு தலைமைத்துவத்தை அடைய வேண்டும். 

அந்த சமூதாயத்துக்காக பேசுகின்ற ஒருவர் அந்த மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அங்கு இணைந்து போட்டியிடுகின்றோம்.

பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்டிருக்கின்ற இந்த மாவட்டத்திலே முஸ்லிம்களுடைய உரிமைகளை சிலர் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். 

அவற்றைத்தர மறுக்கின்றார்கள். துன்பங்களும் துயரங்களும் உங்களைத் தேடி வருகின்றதன.

இந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டியிருப்பதால்இ அரசியல் ரீதியாகத்தான் அவற்றைச் சாதிக்க முடியும். எனவே அனைவரும் ஓர் அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடவேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது.

இன்று நமது சமூகம் பலவகை இன்னல்களையும் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு வருகின்ற காலம். 

இந்த அரசாங்கத்தை கொண்டு வந்த கட்சிகளிலே எங்களுடைய கட்சி முதன்மை பெறுகின்றது.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ வெல்வாரா தோற்பாரா என்ற கேள்விக்குறியோடு இருந்த அந்த கால கட்டத்திலே அவருக்கு பக்கபலமாக இருந்தது எங்களுடைய கட்சி.

அவருடைய வெற்றிக்காக இந்த நாடு முழுவதும் சென்று அலைந்தவர்கள் நாங்கள்.

அவருடைய வெற்றியின் பின்னர் இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட்டது. எங்கு குண்டு வெடிக்கும் என்று அச்சம் கொண்ட அந்தக் காலம் முடிவுக்கு வந்தது. 

ஏற்றுமதித்துறையும் சுற்றுலாத்துறையும் வாத்தக வாணிபத்துறையும் வளர்ச்சியடைந்தது. பொருளாதாரத்துறை மேம்பட்டது.

இவ்வாறு பல்வேறு வகையிலும் வளர்ச்சி கண்டு வருகின்ற இந்த நாட்டிலே பத்து வீதமாக வாழுகின்ற முஸ்லிம்கள் தங்களுடைய பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும்? எங்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையும்? 
எங்களுடைய எதிர்காலத்தை சில இனவாத கும்பல்கள் சீரழித்து நாசமாக்கிவிடுவார்களோ என்ற ஒரு பயத்தோடு வாழ்கின்ற சூழல் இந்த நாட்டிலே உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் அமைதியை விரும்புகின்ற சமூகமாக வாழ்ந்துவருகின்றது. 

இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைமைகளைக் கொண்டதொரு சமூகம்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக தனிநாட்டு பிரிவினையை எதிர்த்து பல்வேறு தியாகங்களை முஸ்லிம்கள் செய்திருக்கிறார்கள்.

இந்த சமூகம் சமாதானத்துக்குப் பிறகு சந்தோசப்பட்டு நாங்களும் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றுமையாக வாழுகின்ற காலம் பிறந்திருக்கிறது. சமாதானச் சூழல் எங்களை வாழ வைக்கும். 

எங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றதொரு எதிர்பார்ப்போடு இருந்த சமூகத்துக்கு கடந்த இரண்டு வருடங்களாக இனவாத கும்பல் இந்த நாட்டிலே உருவாகி எப்படியாவது அவர்களைச்  சீண்டி உணர்ச்சியை ஏற்படுத்தி பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடுவதனூடாக தங்களுடைய இருப்பை பலப்படுத்திஇ இந்த நாட்டில் இன்னொரு இரத்த ஆறு ஓடுவதற்கு வழி சமைத்து முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற ஒரு கூட்டமாக உருவாகிக்கொண்டு வருகிறார்கள். 

இந்த நேரத்திலே முஸ்லிம்கள் அவதானமாக செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கிண்ணியா பிரதேச நகர பிதாவின் இந்த விடா முயற்சிஇ தேசிய ரீதயாக எல்லோரையும் கிண்ணியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 

திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்கின்ற அனைவருக்கும் இந்த பொழுதுபோக்கு பூங்கா அவர்களின் உள்ளத்தை கவர்ந்தெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இவ்வாறான பூங்காவினை காணமுடியாது. 
 
புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் கிண்ணியா பூங்கா முதன்மை பெறுகின்றதென இப்போது ஆளுநர் என்னிடம் புகழ்ந்து கூறினார்.



உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►