பிரித்தானியாவின் ஹெர்ட்போர்ட்ஷயரை சேர்ந்தவர் டேவிட் சொர்கின். இவரது மகன் கீரண் சொர்கின் (9).
பிறப்பிலிருந்து காதில்லாமல் இச்சிறுவன் இருந்ததால், இவனுக்கு கேட்டும் திறனில் குறைபாடு இருந்துள்ளது.இதனால் இவன், பள்ளியில் கல்வி கற்க மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளான்.
இந்நிலையில் சிறுவனின் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும், என அவனை அழைத்து கொண்டு கிரேட் ஆர்மாண்ட் ஸ்ட்ரீட் என்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
கீரணை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது விலாவில் உள்ள குறுத்தெலும்பை எடுத்து அதை காதாக வடிவமைத்து, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.
இதன்பின் மருத்துவர்கள் காது கேட்கும் இயந்திரத்தை பொருத்தியதால், அவன் கேட்கும் ஆற்றலை பெற்றுள்ளான்.
இதுகுறித்து கீரணின் தந்தை கூறுகையில், கருவி இல்லாமல் 90 சதவிகிதம் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டாலும், அதை பொருத்தியவுடன் அவனுக்கு காற்று வீசுவதும், பறவைகளின் க்ரீச் ஒலியும் நன்றாக கேட்கிறது என்றும் நானும் என் மனைவி லூயிசும் எதிர்பார்த்ததை விட கீரணின் செவித்திறன் அருமையாக உள்ளது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply