
திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா என ஏ.எவ்.பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அவரின் 79 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வட இந்தியாவில் உள்ள இமயமலையின் தனியான பகுதி ஒன்றில் அவர் உரையாற்றிய போதே இவ்வவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஹொலிவூட் நட்சத்திரமான றிச்சர்ட் ஹரே கலந்துகொண்டிருந்தார். புத்த மத அடையாளம் உடைய இந்த நாடுகளில் பெரும்பான்மை மதத்தவர்களான பௌத்தர்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
மியான்மரில் 2012 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் மீது இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் 250 வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோன்று கடந்த மாதம் இலங்கையிலும் அண்மையில் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள், வீடுகள் சேதமடைந்தன. இம்மாதிரியான சம்பவங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply