153
பேருடன் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகிலுள்ள புகலிடக்
கோரிக்கையாளர்கள் அந்த நாட்டின் சுங்கப் பிரிவிற்கு சொந்தமான கப்பலில்
தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இன்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தமது பொறுப்பிலுள்ள இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான எந்தவித ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவுஸ்திரேலிய அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவின் புதுச்சேரி கரையோரத்திலிருந்து கடந்த மாதம் படகொன்றின் மூலம் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு அல்லது நவ்ரூ தீவுக்கு அல்லது பப்புவா நியூகினியாவுக்கு அனுப்புவதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அந்த நாட்டு நீதிமன்றத்திடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவிற்கு சொந்தமான கப்பலொன்றின் உள்ளக அறையில் அடைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply