blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 27, 2014

ஈராக்கிற்கான பயணங்களை மேற்கொள்ளும்போது அவதானம் தேவை என இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்


ஈராக்கிற்கான பயணங்களை மேற்கொள்ளும்போது அவதானம் தேவை என இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்ஈராக்கில் நிலவுகின்ற யுத்த சூழ்நிலை காரணமாக மறுஅறிவித்தல் வரை அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு, இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் ஈராக்கில் தற்போது தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களும், பக்தாத்திலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு, தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுள்ளது.

0096 4770 48 47 458 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது slembirq@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் ஈராக்கிற்கான இலங்கைத் தூதரகத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈராக்கில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு இதுவரை எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் சுமித் நாகந்தல சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல் இடம்பெறும் பகுதிகளில் இலங்கையர்கள் தங்கிருந்தமை தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►