blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 27, 2014

ரஜரட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினர், மாணவர்களால் தொடர்ந்தும் வீட்டுக் காவல்

ரஜரட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினர், மாணவர்களால் தொடர்ந்தும் வீட்டுக் காவல்ரஜரட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட விரிவிரையாளர்கள் சிலர் துணைவேந்தரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் மாணவர்களால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


27 மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கல்விக்கான தடையை நீக்குவதாக வாக்குறுதி வழங்கும் வரை அந்த இடத்திலிருந்து நகர்வதில்லை என பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தினேஷ் குமார தெரிவிக்கின்றார்.

ரஜரட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட விரிவுரையாளர்களை நேற்று மாலை முதல் துணைவேந்தரின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் மாணவர்கள் தடுத்து வைத்துள்ளனர்.

இதேவேளை, இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தனவிடம் தொடர்புகொண்டு வினவப்பட்டது.

கல்வித் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் மன்னிப்புக் கோரும் பட்சத்தில் அவர்களின் கல்வித் தடையை நீக்குவதாக முன்வைக்கப்பட்ட நிபந்தனையை மாணவர்கள் நிராகரித்துள்ளதாக ரஜரட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►