வெள்ளிக்கிழமை
நாட்களில் ஜும்ஆத் தொழுகையின்போது, பள்ளிவாசலுக்கு வெளியே தொழுவதை
முஸ்லிம்கள் இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் சகல
முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக –
கொழும்பு கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை உள்ளிட்ட சில
பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வெளியே வீதியோரங்களில் சில முஸ்லிம்கள்
ஜும்ஆத் தொழுகை தொழுகின்றனர்.
இதனால்.
பாதுகாப்பு தரப்பில் மாத்திரமல்ல முஸ்லிம்களின் பாதுகாப் பிற்கும் பல்வேறு
சிக்கல்கள், பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு என்றும், கொழும்பு பிரதேச
பள்ளிவாசல்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின்
தற்போதைய அசாதாரண சூழ்நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, பள்ளிவாசல்களுக்கு
வெளியே தொழும் சகல முஸ்லிம்களும், உள்ளே சென்று தமக்குரிய இடங்களை இயன்றளவு
ஒதுக்கிக் கொண்டு தொழுமாறும், நிர்வாகிகள் அனைத்து முஸ்லிம் களிடமும்
தயவாகக் கேட்டுக்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply