blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 27, 2014

மாரடைப்பால் சிறையில் கைதி துடிதுடித்த நேரத்தில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினர் (video,photo)

ukகுடிபோதை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு கைதி மாரடைபால் சிறையில் துடிதுடித்த நேரத்தில் அந்த கைதிக்கு காவலாக இருந்த இரண்டு போலீஸார் தங்களது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த அதிர்ச்சி செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.


பிரிட்டனில் உள்ள Birmingham என்ற காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு போலீஸார், Lloyd Butler என்ற 39 வயது நபரை போதை வழக்கு ஒன்றிற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மறுநாள் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அந்த கைதியை சிறையில் அடைத்து பூட்டி வைத்தனர். சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட Lloyd Butler மாரடைப்பால் துடித்தார். தனக்கு மருத்துவ உதவி தரும்படி போலீஸாரை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் கைதியின் வேண்டுகோளை காதில் வாங்காத அந்த கல்நெஞ்ச போலீஸார்கள், தங்களது கம்ப்யூட்டரில் ஆபாச படத்தை பார்த்து கொண்டிருப்பதை அங்கிருந்த சிசிடிவி கேமராவினால் கண்டுபிடிக்கப்பட்டது.

3 மணி நேரத்தில் மாரடைப்பு வந்த கைதி மரணம் அடைந்துவிட்டார்.
கைது செய்யப்பட்ட ஒருவருக்கு தரவேண்டிய அடிப்படை மருத்துவ உதவிகளை செய்யாமல் பணி நேரத்தில் ஆபாச படம்பார்த்த இரண்டு போலீஸார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் Birmingham பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►