blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

ஈலை இரையாக பிடிக்க சென்று சுருண்ட முதலை

நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை.  சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது.  அந்த வேளையில் அதற்கு ஈல் என்ற உயிரினம் தென்பட்டது.
இது பார்ப்பதற்கு மீன் போன்ற தோற்றமளிப்பதுடன் நீந்தி செல்லும் தன்மை கொண்டது.  பசியால் வாடியிருந்த முதலைக்கு இரை கிடைத்த சந்தோசத்தில் வேகமாக சென்று அதனை கடித்துள்ளது.
ஆனால், கடித்த வேகத்தில் ஒரு நிமிடத்திற்கு முதலை அசையாமல் நின்று விட்டது.  அதற்கு காரணம் ஈல் கொடுத்த ஷாக் தான்.  சிறிய வகை ஈல்கள் 100 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.  பெரிய வகை ஈல்கள் 450 முதல் 650 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.  இது தெரியாமல் இரை கிடைத்த சந்தோஷத்தில் அதனை பிடிக்க சென்ற முதலைக்கு கிடைத்தது என்னவோ எலக்ட்ரிக் ஷாக் தான்.  அதன்பின்பு அது லேசாக அசைந்து அங்கேயே கிடந்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►