blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

'ஜேர்மனிக்குச் சென்ற எனக்கு பிலிப்பைன்ஸ் யுவதி மூலம் எச்.ஐ.வி. தொற்றியது'


டையூறுகள் முதலில் நம்முடைய மனதில்தான் பிறக்கின்றன. அதன்பிறகே, அவை நம்முடைய சூழ்நிலையில் பிரதிபலிக்கின்றன. மனதிலே பிறக்கின்ற படியால் நம் மனதைக் கொண்டுதான் அவற்றை வெல்ல வேண்டும். மனதால் வென்ற ஒரு மலையக இளைஞனின் துணிவை இன்று காணப் போகின்றோம்.

மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்தான் ரவி. (பெயர்மாற்றப்பட்டுள்ளது) பல வருடங்களாக இவரின் பெற்றோர் கொழும்பில் வாழ்கின்றனர். தந்தை புறக்கோட்டையில் நாட்டாமை தொழில்புரிகின்றார். ஏழைக்குடும்பம். ரவியே தனது கதையை சொல்கிறார். வாசியுங்கள்.

எங்கள் குடும்பத்துடன் வறுமையும் எங்களுடனேயே வாழப்பழகிக் கொண்டது. அம்மா, அப்பாவுடன் நானும்
தம்பி, அக்காவுமாக சேர்ந்து ஐந்து பேர். நான் படிப்பது போன்றே பாடசாலையில் றக்பி விளையாட்டில் எனது திறமையைக் காட்டினேனன். அதேபோன்று கால்பந்தாட்டத்திலும் எனது திறமையைக் காட்டினேன். பாடசாலையை விட்டு விலகியதும் கொழும்பின் ஒரு றக்பி விளையாட்டு அணியில் இடம்பிடித்தேன்.

பின்னர் எனது மனக் கட்டுப்பாடும் நண்பர்களால் உடைத்தெரியப்பட்டது. நண்பர்களின் குடிப்பழக்கம் என்னையும் இழுத்துக்கொண்டது. வீட்டில் அப்பாவும் குடிப்பார். நானும் குடிக்கு அடிமையானேன். மனம் தத்தளிக்கும் நேரத்தில் கஞ்சா பாவனைக்கும் அடிமையானேன்.

எனது குடிப்பழக்கம் எனது அணியின் பயிற்றுவிப்பாளர் மனதையும் அச்சுறுத்திய. வீட்டில் வறுமை தொத்திக் கொள்ள எனது அவலத்தைக் கண்டு அவரும் அதிர்ந்துப் போனார். எனது குடும்ப சூழ்நிலையையும், எனது பழக்க மாற்றத்தையும் கண்டு அனுதாபத்தோடு அவரின் பெரும் முயற்சியால் எனது றக்பி கழகத்தின் அனுசரணையில் ஜேர்மனி நாட்டுக்கு அனுப்பி வைத்தார் பயிற்றுவிப்பாளர்.

ஜேர்மனியில் றக்பி மற்றும் கால்பந்தாட்ட கழகத்தில் கழக விளையாட்டு வீரர்கள் இணைப்பாளர் பதவி கிடைத்தது. அப்போது எனக்கு வயது வெறும் இருபத்திரண்டு மட்டுமேயாகும். இது நடந்தது 2008ஆம் ஆண்டிலாகும். எனது இணைப்பாளர் தொழிலோடு றக்பி மற்றும் கால்பந்தாட்டத்திலும் கலந்து அங்குள்ளவர்களை பிரமிக்க வைப்பேன்.

அப்போது எனது தொழில்சார் விளையாட்டு கழகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயதேயான அழகி விளையாட்டு வீரர்களுக்கு உணவு வகைகளை பரிமாறும் பணியில் இணைந்திருந்தாள். எனது விளையாட்டு யுக்திகளைப் பார்த்த அவள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினாள். நாட்கள் கடந்து மாதங்களை கடக்க எங்களின் காதலும் தண்ணீர் இன்றியே வளரத் தொடங்கியது.

திடீரென ஒருநாள் அவள் 'இருவரும் திருமணம் முடித்து இலங்கைக்கு போவோம்' என்றாள். நானும் சம்மதித்தேன். எது எப்படியிருந்தாலும் எனது உழைப்பு பணத்தை மாதாமாதம் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவேன். இருந்தும் அவளும் நானும் விடுதி ஒன்றில் அறை எடுத்து குடும்பமாக தங்கி வாழ்ந்தோம். அவள் பல்வேறு பொய்களை கூறி எனது பணத்தை கைப்பற்ற பல முறை எத்தணித்தாள்.

இந்நிலையில், 2009இல் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினேன். மீண்டும் அதே விளையாட்டு சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு தொழில்வாய்ப்பு கிடைத்து செல்ல முயன்று வைத்திய சான்றிதழ் பெறுவதற்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்று வைத்திய பரிசோதனையை மேற்கொண்டேன். அவ் வைத்தியசாலை பொறுப்பாளர் இரு வாரத்தில் எனது வைத்திய அறிக்கையை ஈ.மெயிலில் அனுப்புவதாக தெரிவித்தார். மீண்டும் ஜெர்மனியை சென்றடைந்து எனது பழையத் தொழிலை பெற்றுக்கொண்டேன்.

நான் தொழில்புரியும் கழகத்தின் அடையாள அட்டையை பெறுவதற்காக கழகத்தின் வைத்தியர் எனது இரத்தத்தைப் பெற்றார். இதேநேரம் இலங்கையிலிருந்து வைத்திய அறிக்கையும் வந்து சேர்ந்தது. இவ் அறிக்கையை பார்த்த வைத்தியர் எனது இரத்தத்தை இரண்டாவது முறையாகவும் பெற்றார்.

வைத்தியரின் உதவியாளரிடம்இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையின் விபரத்தைக் கேட்டதும், 'உமக்குள் எச்.ஐ.வி.தொற்று உள்ளது' என்றார்.


அவரின் வார்த்தைகள் என்னை வேறு ஒரு உலகுக்கு இழுத்துச் சென்றன. முழு உலகமும் எனக்கு இருட்டாக இருந்தது. சாதிசனம் உறவுகள் எதுவுமே எனது மனதில் நிற்கவில்லை. ஆடிப் போய்விட்டேன்.

இலங்கையிலிருந்து வைத்திய அறிக்கை வர ஆறு மாதங்கள் சென்றமையினால் அவ் ஆறு மாதமும் பிலிப்பைன்ஸ் காரியோடு உல்லாசமாக வாழ்ந்தேன். எனது ஆறுமாத உழைப்பின் பணம் முழுவதும் அவளுக்கு கைமாறியது. வீட்டுக்கு பணம் அனுப்பவில்லை. மிகவும் நுட்பமாக அவ்வூர் வைத்திய ர்கள் எனது இரத்தத்தை பரிசோதித்து அவ் அறிக்கையையும் அவ்வூர் பொலிஸாரிடம் வழங்கிவிட்டனர்.

திடீரென பொலிஸார் ஒருநாள் எனது வீட்டை சுற்றி வளைத்தனர். பல்வேறு வகையான துப்பாக்கிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் வீட்டைச் சுற்றி சர்வதேச கொள்ளைக்காரனை கைது செய்வதுப் போல் ஓடினால் சுட்டுக் காயப்படுத்தும் நிலையில் உஷாராக நின்றனர். நான் அவர்களிடம் பிரச்சினைக் கொள்ளாது சரணடைந்தேன். என்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டுசென்றனர். என்னை பொலிஸ் நிலைய இருட்டறையில் அடைந்தனர்.

அன்றைய தினம் அந்த பிலிப்பைன்ஸ் யுவதி, என்னை காண்பதற்கு பொலிஸ் நிலையம் வந்தாள். என்னை கட்டிப்பிடித்து அழுதாள். வடிவேல் சினிமா படத்தில் பொலிஸ் வருவதாக அடித்துக் கேட்டாலும் எதையும் சொல்லாதே என்று சொல்லுவதைப் போன்றே அவளும் என்னிடம் சொல்லி அழுதாள்.

'நாம் இருவரும் ஒன்றாக வாழ்ந்ததையோஇ ஒரே அறையில் தங்கியதையோ சொல்ல வேண்டாம். என்னையும் காட்டிக் கொடுக்க வேண்டாம். எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்கின்றது. எனது 16 வயதில் எனது அம்மாவும் அப்பாவும் 42 வயதான ஒருவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்தனர். அவன் மூலமே எனக்கு எச்.ஐ.வி.தொற்று பரவி இருக்கின்றது. அவனின் முதல் மனைவி மரணமாகிவிட்டாள். அவனது தொல்லைத் தாங்காது அவளை கைவிட்டு எனது அம்மா வீட்டுக்கு வந்தேன். குடும்ப சூழ்நிலையால் இங்கு வந்து சேர்ந்தேன்? என அவளது சோகத்தை சொல்லி அழஇ அவளது சோகம் பின்னர் அவளை பொலிஸார் துருவி துருவி விசாரித்தனர். பிலிப்பைன்ஸ் பெண்ணை நான் காட்டிக் கொடுக்கவில்லை. இலங்கையில் விபசார தொழில் புரியும் பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவித்தேன். அவ்விபசாரியைப் பற்றி விசாரித்தனர். விபரத்தை தெரிவித்ததும் எனது விசாரணை பைலை சிவப்பு மை பேனையால் எழுதி மூடிவிட்டனர். பொலிஸ் அதிகாரி  பைல்குளோஸ் என சத்தமிட்டுக் கத்தினார் அன்றைய தினமே இலங்கைக்கு அனுப்பி விட்டனர்.

நாடு திரும்பியதும் எனது பாடசாலை நண்பனிடம் சரணடைந்தேன். வீட்டுக்குச் சொல்லவில்லை. நண்பனிடமும் சொல்லவில்லை. மீண்டும் குடிக்கு அடிமையானேன். தற்கொலை செய்வதற்கு எத்தனித்தேன். எனது நண்பனின் அம்மா தொண்டு நிறுவனம் ஒன்றில் பல்வேறு நாடுகளில் கடமையாற்றுகின்றார். எனது நண்பனுக்கு விடயத்தை குடி வெறியில் கூறிவிட்டேன். அவன் உடனடியாக செயற்பட்டான். அவனது அம்மாவுக்கு அவன் தெரிவிக்க உடனடியாக என்னை எலைன்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்ட் அழைத்துச் சென்றான். இது ஒரு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் அவர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள். அவர்களின் ஆலோசனை என்னை வேறு ஒரு உலகுக்குள் நுழைய வைத்தது. எஸ்.டி.பீயில் எச்.ஐ.விக்கு மருந்து வகைகளை பெற்று சிகிச்சைகளை முறையாக பெற்றுவந்த நிலையில் மீண்டும் மதுவுக்கு அடிமையானேன்.


எச்.ஐ.வியுடன் வாழும் ஒரு பெண் அதன் பாதிப்பை தெரிந்துக் கொண்டும் எனக்கு கொடுத்துவிட்டாள் என்ற மனக்கவலையே என்னை மதுவுக்குள் மீண்டும் மீண்டும் நுழைய வைத்தது. பிலிப்பைன்ஸ் மங்கையின் மயக்கம் இப்போது மதுவுக்கு வழிகாட்டி விட்டது. மீண்டும் கொழும்பில் வாழும் எனது பெற்றோரோடு இணைந்தேன். எனது பெற்றோரை விட்டும் வறுமை வெளியேற மறுப்பதை கண்டு மனம் நொந்தேன்.

யேசு பிரானின் பிறந்த தினமான கிறிஸ்மஸ் விழா 2012இல் பெரும் சிறப்பாக எலைன்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்ட் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. எனது மனப்பாரத்தோடு எனக்கான இளைப்பாறுதலைத் தேடிய நிலையில் நானும் இந்நிகழ்வில் இணைந்துக் கொண்டேன். விழா முடிவடைந்ததும் ஒரு இளம் பெண் என்னோடு கதைக்க ஆரம்பித்தார்.

ஏன் மதுவுக்கு அடிமையாகி அநியாயமாக வாழ்வை தொலைத்துக் கொள்ளப் போகிறீர்கள் இவரின் இவ் வார்த்தைகள் அதிரடியாக எனக்கு ஆறுதலைக் கொடுத்தது வாழ வேண்டிய வயதில் வாழப்பழகுங்கள் உங்களின் நோய்க்கு முறையாக மருந்து வகைகளை பாவியுங்கள் நினைத்தால் இன்னும் எவ்வளவோ உங்களால் சாதிக்க இயலும் என அவர் தொடராக கூறிய வார்த்தைகள் எனது மனதை மாற்றியது. அவ்வார்த்தைகள் எனக்கு மருந்தாகின.

அந்த கிறிஸ்தஸ் தினத்தில் எனது மது பாவனையை நிறுத்தினேன். தற்கொலை செய்துக் கொள்ளும் யோசனையை கை விட்டேன். திடீரென கிறிஸ்மஸ் தினத்தில் எனது வாழ்க்கையை திருப்பிப் போட்ட அப் பெண்ணால் எனது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

இப்போது எனக்கு 27 வயது தனியார் நிறுவனம் ஒன்றில் அச்சு ஊடகத்துக்கு விளம்பர முகவராக தொழில் புரிகின்றேன் என்றார் வாழ்க்கையில் தோற்றுப் போய் முன் பின் தெரியாத பெண் ஒருவரால் மீண்டும் வாழ்வின் எழுச்சியை நோக்கிப் பயணித்ததில் பயணித்துக் கொண்டு இருக்கும் இளைஞரான ரவி மீண்டும் தொடர்கிறார் ரவி.

ஆசையை அடக்கிக் கொள்ளுங்கள் முன் பின் தெரியாதவர்களுடன் உறவு கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து பின்னர் அழுது புலம்புவதில் பயன் இல்லை. ஏழ்மையைக் காட்டி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும். இத் தொழில் தொடருமேயானால் உலகில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவும். மக்களுக்கு அரசும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் விழிப்பை மேற்கொள்ளும் செயல்களை அதிகரிக்க வேண்டும் என்ற செய்தியை உலகுக்கு வழங்குகிறார் ரவி. ரவியின் வாழ்வு வளம் பெற நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

மரணத்தின் வாயிலில் இருப்போருக்கு அமைதி இருக்குமா? இருக்காது இவ்வாறனவர்களுக்கு அப்போது அமைதி தேவை. காலச் சக்கரத்தின் சுழலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ரவிக்கு ஆதரவு வழங்கிய அவ் இளம் பெண் யார்? அந்த அமைதி ஆழ்கடல் முத்தைப் பற்றிய கதையை அடுத்த வாரம் பார்ப்போம் வாசகர்களே! அதுவரை பொறுத்திருங்கள்.


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►