blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

கல்முனை ஸாஹிரா கல்லூரி தொடர்ந்தும் சாதனை படைக்க வேண்டும் - றினோஸ் ஹனீபா

 செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் எமது சமூகத்தின் பலம் கல்வியிலேயே தங்கியிருக்கின்றது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இன்று உலகம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மாறிக்கொண்டிருக்கின்றது அந்த மாற்றத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் எமது கல்விச் சாதனைகளால் மாத்திரமே முடியும். எமது அமைப்பால் பல கல்விரீதியான நிகழ்ச்சிகளை இப்பாடசாலை வளர்ச்சிக்காக நடாத்தினோம் தொடர்ந்தும் நடாத்துவோம். எமது பாடசாலையின் சாதனை எமக்கு கிடைத்த சாதனையே எனகுறிப்பிட்டார்.


ஒன்பது 'ஏ' சித்திகளை ஏழு மாணவர்களும்
எட்டு 'ஏ' சித்திகளை பத்து மாணவர்களும்
எழு 'ஏ' சித்திகளை பதினொரு மாணவர்களும்
ஆறு 'ஏ' சித்திகளை ஒன்பது மாணவர்களும்
ஐந்து 'ஏ' சித்திகளை ஆறு மாணவர்களும்
பெற்றுள்ளனர்

இது மற்றுமன்றி ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்கு தோற்றிய ஒரு மாணவர் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்திகளை பெற்றுள்ளார்.  இந்த மாணவர்களுக்கு கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும், அதிபர் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►