செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும்
மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை "மார்ஷ் மாலோ"
என்றும் அழைக்கின்றனர்.
செம்பருத்தி இலைகள்
என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித
சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல்
உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த
தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லது.
செம்பருத்தி இலைகளில் உடல்நலம் பேணும் இன்னும் பல நன்மைகள் அடங்கியுள்ளது.
இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது.
மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில்
விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply