திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் எட்டு பிள்ளைகளின் தந்தையான அல்லா பிச்சை செய்யது (வயது-71) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பள்ளிவாசலுக்கு சென்று தொழுது விட்டு துவிச்சக்கர வண்டியில் வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பின் புறமாக மோதியதில் குறித்த வயோதிபர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் அங்கு சிகிச்சைக்கு பயனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மோதுண்ட நிலையில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதியான ஜே.ஜெகதீபன் (27) மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சாரதியை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் திருச்செந்தில் நாதன் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் ஜூன் மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply