தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஜூன் 2-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் கடத்தப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மோடி உறுதி அளித்துள்ளார்.
“பாதிரியாரை விரைவில் மீட்க ஆப்கான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள. காபூலில் உள்ள இந்தியத் தூதர் ஆப்கன் அதிபர் அலுவலகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறார்.
எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஆப்கான் பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்பு கொண்டு பேசுகிறார். பாதிரியாரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சூழ்நிலையை நான் உன்னிப்பாக கண்காணிப்பேன்” என்று மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply