திடீரென வெள்ளம்
வந்த போது, ஐதராபாத்தைச் சேர்ந்த கிரண்குமார் என்ற மாணவன் 2 மாணவிகளை கை
கொடுத்து கரை சேர்த்தார்.
ஆனால் அவர் கரையேறுவதற்குள், அவர் நின்றிருந்த
பாறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அவரும் வெள்ளத்தில் மூழ்கினர்.
தங்களைக் காப்பாற்றிவிட்டு அவர் உயிரிழந்ததைப் பார்த்த மாணவிகள் கதறி
அழுதுள்ளனர்.
பி.டெக் 2–ம்
ஆண்டு படிக்கும் மாணவி ஸ்ரீநிதி ஆற்றுக்குள் இறங்கி போட்டோ எடுத்து விட்டு
கரைக்கு திரும்பினார்.
அப்போது அவர் ஆற்றுப் பகுதியில் விட்டுவிட்டு வந்த
தனது செருப்பை எடுக்க ஆற்றில் இறங்கினார்.
அந்த கண் இமைக்கும் நேரத்தில்
அவரை திடீரென ஆற்று வெள்ளம் அடித்துச் சென்று விட்டுள்ளது என்று மாணவ
மாணவிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தில்
சிக்கியவர்களை அங்குள்ள மக்கள் கயிறை வீசி காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அந்த
கயிறை மாணவ, மாணவிகளால் பிடிக்க முடியவில்லை. ஒருவர் மட்டும் தான் கயிறை
பிடித்து உயிர் தப்பினார் என்றும் தெரிவித்தனர்.
உயிர் தப்பிய ரெங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா கூறும்போது:
அகில் என்பவர்
அவருடைய கேமிராவில் படம் எடுத்துக் கொண்டு இருந்தார்.
அவர் கரையேறும்
நேரத்தில் நான் எனது கேமிராவில் படம் எடுத்து தாருங்கள் என்று கூறி எனது
கேமிராவை எடுக்க கரைக்கு வந்தேன்.
கேமராவை எடுப்பதற்குள் வெள்ளத்தில்
அவர்கள் அடித்துச் சென்று விட்டனர்.
ஒருவேளை நான் கூறாமல் இருந்திருந்தால்
அவர் கரையேறியிருப்பாரோ என்று நினைத்தாலே நெஞ்சம் கனக்கிறது.
மாணவ,
மாணவிகள் குழு குழுவாக அடித்துச் செல்லபட்ட காட்சியை கண்டு நிலை குலைந்து
போனேன்’’ என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply