blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 29, 2014

நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை

நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைநிர்ணய விலையை விட கூடுதலான விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய மாவட்ட ரீதியில் சுற்றிவளைப்புக்குழுக்களை நியமித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த 400 க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

சந்தையில் அரிசி விலை அதிகரிப்பை கட்டுபடுத்தும் நோக்கில் அரிசிக்கான நிர்ணய விலைகளை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின்  நிர்ணய விலையாக 77 ரூபாவும், வெள்ளை நாட்டரிசிக்கான நிர்ணய விலையாக 66 ரூபாவும் அறிவிக்கப்பட்டது.

வெள்ளைப் பச்சை அரிசி மற்றும் சிவப்பு நாட்டரிசி ஆகியவற்றுக்கான நிர்ணய விலை 66 ரூபாவாகும்,
ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசியின் நிர்ணய விலை 60 ரூபாவெனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிர்ணய விலைகளை மீறி கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►