blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 29, 2014

இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி (Photos)


00182_1
வவுனியா மாவட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்ட ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் வட மாகாணத்தில் ஐந்து மாவட்ட இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து இலஞ்ச ஊழலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
நேற்று மாகாணத்தின் பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர சில்வா தலைமையில் இந்தப் பேரணி வவுனியா நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாணத்தில் இலஞ்ச ஊழல் அதிகளவில் காணப்படுவதை கண்டித்தும் அவற்றை தடுக்கும் முகமாகவும் வவுனியா, கிளிநெச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட இளைஞர் யுவதிகளின் பூரண பங்கேற்புடன் இவ் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்ட ஆலோசனை மையத்திலிருந்து தொடங்கிய ஆர்ப்பாட்டப் பேரணி பேருந்து நிலையவீதி ஊடாக வவுனியா பொதுவைத்தியசாலை சென்று மீண்டும் வவுனியா மாவட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்ட ஆலேசனை மையத்திற்கே இலஞ்ச ஊழலுக்கு எதிரன கோசங்களுடன் சென்று நிறைவடைந்தது.

இலஞ்ச ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் வடமாகாணத்தில் மெற்கொள்ளப்படும் என்று இலஞ்ச ஊழலுக்கு எதிரன சட்ட ஆலேசனை மையத்தின் மாகாணத்தின் பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர சில்வா அழுத்தமாகத் தெரிவித்தார்.

2005173072Untitled-1

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►