blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 29, 2014

சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய வெளிநாட்டவர்களை தடுக்கும் வகையில் விசேட செயற்றிட்டம்

சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய வெளிநாட்டவர்களை தடுக்கும் வகையில் விசேட செயற்றிட்டம்சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டம் காரணமாக அண்மையில் சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இணைத்தளம் உள்ளிட்ட பல்வேறு வழிகளை பயன்படுத்தி சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு தூண்டப்படுகின்றமை தொடர்பிலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளதாக அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►