blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 29, 2014

பிரேசில் மற்றும் கொலம்பிய அணிகள் காலிறுதிக்கு தகுதி


பிரேசில் மற்றும் கொலம்பிய அணிகள் காலிறுதிக்கு தகுதிஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப் போட்டிக்கு பிரேசில் மற்றும் கொலம்பிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.


இறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற நொக் அவுட் சுற்றின் முதலாவது போட்டியில் சிலி அணியை பனால்டி சூட் அவுட் முறையில் 3 – 2 என கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிகொண்டது.

போட்டி நேரம் நிறைவடைந்த போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்த நிலையில்  வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

எனினும் மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல் போட முடியாமல் போக பனால்டி முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டதுடன் அதில் பிரேசில் அணி 3 கோல்களையும் சிலி இரண்டு கோல்களையும் போட்டியிருந்தன.

பிரேசில் அணியின் கோல் காப்பாளர் ஜுலிய சீசர் சிலி அணியின் காலிறுதிப் போட்டி கனவை தகர்த்திருந்தார்.

இதேவேளை நொக் அவுட் சுற்றின் மற்றுமொரு போட்டியில் உருகுவே அணியை 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்ட கொலம்பிய அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் 28 மற்றும் 50 ஆவது நிமிடங்களில் கொலம்பிய அணிசார்பாக கோல் போட்ட ஜேம்ஸ் ரொட்ரிக்கஸ் அதிகளவு கோல்களை போட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இத்தாலி வீரரை கடித்த குற்றச்சாட்டில் தடை விதிக்கப்பட்ட உருகுவேயின் சர்ச்சைக்குரிய வீரரான லூயிஸ் ஸ்வாரஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்பிரகாரம் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டியில் பிரேசில் மற்றும் கொலம்பிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதேவேளை இன்றைய தினம் நடைபெறும் நொக்அவுட் சுற்றின் தீர்மானமிக்க போட்டிகளில் நெதர்லாந்து – மெக்சிக்கோ அணிகளும் ஆஜென்ரின – சுவிட்ஸர்லாந்து அணிகளும் விளையாடவுள்ளன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►