எனது தாயார் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், என் தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள். முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கூறுவதனைப் போன்று எனது தாயாரான சிராந்தி ராஜபக்ச எந்தவிதமான தங்க மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை.
திறைசேரியில் காணப்படும் தங்கத்தை கொள்ளையிட்டதாக என் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்க மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்று முழுதாக எனது குடும்பத்தின் சார்பில் நிராகரிக்கின்றேன்.
எனது தாயாருக்கும் குடும்பத்திற்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரில் நானும் தந்தையும் மட்டுமெ அரசியலில் ஈடுபட்டோம். எனது தாயாரும் இரண்டு சகோதரர்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.
எவருக்கேனும் அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என்னையும் எனது தந்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 27, 2015
எங்களை பழிவாங்குங்கள்; அம்மாவையும் தம்பிங்களையும் விடுங்க!! பதறுகிறார் நாமல்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply