ஏழாவது ஐ.பி.எல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் ஏபி டி வில்லியர்ஸின் அதிரடியால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 156 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதலளித்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் ஆரம்பத்தில் தடுமாறியது.
விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஆகியோர் ஏமாற்றமளிக்க கிரிஸ் கெய்ல் மாத்திரம் 27 ஓட்டங்கயைள பெற்றுக்கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி, 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஏபி வில்லியர்ஸ் ஆறு பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்ளடங்களாக 41 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 89 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
No comments:
Post a Comment
Leave A Reply