blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 5, 2014

சமஷ்டி ஆட்சியையே மக்கள் கோருகின்றனர்: மா.நடராசா

இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தைப் போன்று சம அதிகாரத்துடன் வாழக்கூடிய சமஷ்டி முறையிலான ஆட்சிமுறையே எமக்கு வேண்டும் அபிவிருத்திகள் அல்ல என எமது மக்கள் கேட்கின்றனர். இவற்றுக்காகவே மக்கள் எமக்கு வக்களித்தனர். அவற்றையே நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.

அமரர் தந்தை செல்வாவின் நினைவு தினம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிராமத்தலைவர் அ.கந்தவேள் தலைமையில் ஞாயிற்றுக்கிiமை (04) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வெளிநாட்டு நிதியினைக் கொண்டு ஒரு சிலருக்கு நிவாரணங்களை வழங்கி தங்களின் சொந்த இடங்களில் நிம்மதியாக இருக்கின்றார்கள் என சர்வதேசத்தினை பூச்சாண்டி காட்டி நிற்கின்றது அரசு.

இப்பிரதேசங்களுக்கு வருகைதருகின்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் மக்கள் மீள்குயேற்றப்பட்டு அவிருத்திகள் இடம்பெறுவதாக கூறிவருவதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இவற்றினை செய்யமுடியுமா? எனவும் கேள்வி எழுப்பிவருகின்றார்.

அபிவிருத்திக்காக எமது மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. உரிமையை நிலை நாட்டவே வாக்களித்துள்ளனர். 

எமது தமிழினத்தின் பிரச்சினையை யுத்தத்தை காரணங்காட்டி அதனை அரசாங்கம் பயங்கரவாத பிரச்சினையாக சித்தரித்து பொய் பிரசாரம் செய்து சர்வதேசத்திடம் பல உதவிளை பெற்று எமது நடவடிக்கைகளை முடக்கியது. இதனை நம்பி சர்வதேசம் உதவி புரிந்தமை கவலைக்குரிய விடயமாகும்.

தற்போதைய சூழ்நிலையில் எமது மக்களின் உரிமைகள் இலங்கை அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டாலும் இன்று தமிழர் தொடர்பான பிரச்சினை பயங்கரவாத பிரச்சினையல்ல உரிமை தொடர்பான பிரச்சினை என சர்வதேசம் நன்கு உணர்ந்திருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இளைஞர்களை எல்லாம் நான்காம் மாடிக்கு அனுப்பபோகின்றது என  சந்திரகாந்தன் கூறுகின்றார். அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இந்த சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்திருக்கமாட்டார். வெறுமனே பிள்ளையானாகத்தான் இருந்திருப்பார் என்பதனை புரிந்து கொள்ளவேண்டும்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர். ஜெயவர்தன இலங்கையில் முதலில் நிலவிவந்த தேசாதிபதி ஆட்சிமுறையினை மாற்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை கொண்டுவந்தார்.

இதற்கைமாக யாப்பினையும் மாற்றியமைத்தார். இதன்மூலம் எமது தமிழினத்தினை அடக்கலாம் ஒடுக்கலாம் என அவர் நினைத்தார். இதனை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பௌத்த மேலாதிக்கத்தினை நிலைநாட்டுவதற்காக எத்தனை தடவைகளேனும் ஜனாதிபதியாக இருக்கலாம் என்கின்ற முறையை கொண்டு வந்திருக்கின்றது. இதனை, தமிழ் மக்களின் அனைத்து விடயங்களையும் மழுங்கடிப்பதற்காக மேற்கொண்டு இருகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►