blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 5, 2014

இலங்கை மீதான விசாரணை; இம்மாத பிற்பகுதியில் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து இம்மாத பிற்பகுதியில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார்.

இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வதற்கு எப்படியும் சில காலம் எடுக்கும். அது மாத்திரமல்லாது நியூயோர்க்கிலுள்ள ஐ.நா சபையினால் வரவு - செலவு திட்டம் அங்கிகரிக்கப்பட வேண்டும்.

அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த பின்னர் இம்மாத பிற்பகுதியில், விசாரணை பற்றி அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை மீதான விசாரணைகளை மேற்கொள்வதென, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வின் போது விசாரணையை அணில்படுத்துவதற்காக 1,460,000 அமெரிக்க டொலர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை மீதான விசாரணை கோரிக்கை, அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்ட போதிலும் யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►