நாட்டின்
அநேகமான பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்
உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறுகின்றார்.
இதேவேளை,
மழையுடன் கூடிய வானிலை காரணமாக இதுவரை ஒரு மரணம் சம்பவித்துள்ளதாகவும்
மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர்
பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, பதுளை, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண் சரிவு அபாயம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளத்தில்
ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, திருகோணமலை
கிண்ணியா நடுத்தீவுக் கிராமத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்குள் மின் உபகரணங்களை
பயன்படுத்திக்கொண்டிருந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி.
பிள்ளை மற்றும் மனைவியின் தங்கை ஆகியோரே மின்னல் தாக்கத்திற்கு
இலக்காகியுள்ளனர்.
குறித்த நால்வரும் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும்
கிண்ணியா தள வைத்தியசாலையைன் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை,
கிண்ணியாவையும் – குறிஞ்சாக்ணேயையும் இணைக்கும் குறிஞ்சாக்ணேப் பாலத்தின்
நடுவில் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளதால் அதனூடான போக்குவரத்து
தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.
நேற்றிரவு பெய்த கடும் மழையினை அடுத்தே பாலத்தின் நடுவே குழி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply