புதுடெல்லி:
ஐபிஎல் டி20 தொடர் 7வது சீசனின் 25வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர்
கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. பெரோஸ் ஷா கோட்லா
மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
டோனி
தலைமையிலான சென்னை அணி முதல் லீக் ஆட்டத்தில் 200 ரன்னுக்கு அதிகமாக
விளாசியும், பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் - மில்லர் அதிரடியில் வெற்றி
வாய்ப்பை நழுவவிட்டது.
அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடி
வரும் சூப்பர் கிங்ஸ், தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்
பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. தொடக்க வீரர்கள் வேய்ன் ஸ்மித்,
பிரெண்டன் மெக்கல்லம் இருவரின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் முக்கிய
பலமாக விளங்குகிறது. அவர்களைத் தொடர்ந்து ரெய்னா, டுபிளெஸ்சிஸ், டோனி,
ஜடேஜா என்று அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பது, எதிரணி
பவுலர்களுக்கு சவாலாக உள்ளது.
மோகித் ஷர்மா, பென் ஹில்பென்ஹாஸ்
வேகமும், ஜடேஜா - அஷ்வின் சுழல் கூட்டணியும் எதிரணியின் ரன் குவிப்பை
கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. துடிப்பான
பீல்டிங்கும் சென்னை அணிக்கு கூடுதல் சாதகம். தொடர்ச்சியாக 6வது வெற்றியை
வசப்படுத்தும் முனைப்புடன் அந்த அணி களமிறங்கும் நிலையில், டெல்லி அணி 6
போட்டியில் 4 தோல்விகளை சந்தித்துள்ளதால் சற்று தடுமாற்றத்துடன்
இப்போட்டியை எதிர்நோக்குகிறது. கேப்டன் கெவின் பீட்டர்சன், முரளி விஜய்,
டுமினி, டிகாக், மனோஜ் திவாரி, சவுரவ் திவாரி என்று அதிரடி
ஆட்டக்காரர்கள் அதிகம் இருந்தாலும், அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடாதது
டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ராஸ் டெய்லர்,
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பார்மில் இல்லாததும் நெருக்கடியை
அதிகரிக்கிறது. நதீம், ஷமி, பார்னெல் ஆகியோர் துல்லியமாகப் பந்துவீசி
சென்னை பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே டெல்லி அணி வெற்றி
பற்றி நினைக்க முடியும்.
சென்னையுடன் ஒப்பிடும்போது டேர்டெவில்ஸ் சற்று
பலவீனமான அணியாகவே இருந்தாலும், டி20 போட்டியில் எந்த அணியையும்
அலட்சியப்படுத்திவிட முடியாது என்பதால் இன்றைய ஆட்டமும் கடைசி வரை
விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
டெல்லி அணியில் 3 வீரர்கள் குறைப்பு
ஐபிஎல்
7வது சீசனுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மொத்தம் 23 வீரர்கள் இடம்
பெற்றுள்ளனர். இவர்களில் உள்ளூர் வீரர் மிலிந்த் குமார், அரியானா சுழல்
ஜெயந்த் யாதவ், கர்நாடகா வேகம் ஷரத் ஆகிய 3 பேரை தற்காலிகமாக வீட்டுக்கு
அனுப்ப டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
‘இந்த வீரர்களை
உடனடியாக களமிறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதாலும், பயிற்சியின்போது
ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் விதமாகவும் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இவர்களுக்கு உடனடியாக அழைப்பு
விடுக்கப்படும்’ என்று டேர்டெவில்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.டோனி (கேப்டன்), பாபா அபராஜித், ஆர்.அஷ்வின்,
சாமுவேல் பத்ரீ, வேய்ன் பிராவோ, பேப் டு பிளெஸ்சிஸ், ஜான் ஹேஸ்டிங்ஸ்,
மேட் ஹென்றி, பென் ஹில்பென்ஹாஸ், ரவீந்திர ஜடேஜா, பிரெண்டன் மெக்கல்லம்,
மிதுன் மன்ஹாஸ், ரோனித் மோரே, பவான் நேகி, ஆசிஷ் நெஹ்ரா, ஈஷ்வர் பாண்டே,
சுரேஷ் ரெய்னா, விஜய் ஷங்கர், மோகித் ஷர்மா, வேய்ன் ஸ்மித்.
டெல்லி
டேர்டெவில்ஸ்: கெவின் பீட்டர்சன் (கேப்டன்), மயாங்க் அகர்வால், நாதன்
கோல்டர் நைல், குவின்டான் டி காக், ஜீன் பால் டுமினி, கேதார் ஜாதவ்,
தினேஷ் கார்த்திக், சித்தார்த் கவுல், மில்ந்த் குமார், முகமது ஷமி,
ஷாபாஸ் நதீம், ஜிம்மி நீஷாம், வேய்ன் பார்னெல், ஷரத், ராகுல் ஷர்மா, லஷ்மி
ரத்தன் சுக்லா, ராகுல் சுக்லா, ராஸ் டெய்லர், மனோஜ் திவாரி, சவுரவ்
திவாரி, ஜெய்தேவ் உனத்காட், முரளி விஜய், ஜெயந்த் யாதவ்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, May 5, 2014
சூப்பர் கிங்சுடன் இன்று டேர்டெவில்ஸ் பலப்பரீட்சை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
சுப்பிரமணியன் சாமியின் வாய் சும்மாவே இருக்காது போல. யாரையாவது கிண்டலடித்தபடியே இருக்கிறார்.
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply