இந்திய
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு உத்திர பிரதேசம்
மேற்குவங்கம் மற்றும் பிஹார் மாநிலங்களின் 41 தொகுதிகளில் இன்று
நடைபெறுகின்றது.இதுவரை நடைபெற்ற 8 கட்டங்களில் 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ்சின் துணைத் தலைவர் ராகுல்காந்தி உத்திரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் வாரணாசியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.
ஏற்கனவே வாக்குப்பதிவு இடம்பெற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கெண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதுடன், அன்று மாலைக்குள் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply