blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 12, 2014

அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்


அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்சுகயீன விடுமுறையை பதிவு செய்து இன்றைய தினம் பணியிலிருந்து விலகியிருப்பதற்கு அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.

தாதியர்களால் விடுக்கப்படுகின்ற அழுத்தங்களை கண்டித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்று முன்கெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என அகில இலங்கை குடும்பநல சுகாதார உத்தியொகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.

தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று வழமைபோன்று கடமைக்கு சமூகமளிப்பார்கள் என சங்கத்தின் தலைவர் தீப்தி வீரதுங்க தெரிவித்துள்ளார்..
இதேவேளை, குடும்பல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாதியர்கள் அழுத்தங்களை பிரயோகித்தால் நிறுவனத் தலைவர்களிடம் அது தொடர்பில் முறையிடலாம் என பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க கூறியுள்ளார்.

அத்தகைய முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►