ஆசிரியை
ஒருவரை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்
ஆனந்த சரத் குமாரவுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதனைத் தவிர 50 ஆயிரம் ரூபா அபதாரத்தையும் செலுத்துமாறு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.
இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என அறிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈட்டினை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply