இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளின் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ளது.இதன்பிரகாரம் இரண்டு அணிகளுக்கும் இடையில் ஜூன் 15,17 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
தனிப்பட்ட காரணங்களுக்காக மஹேந்திர சிங் தோனியும் ஒய்வளிக்கப்படுவதால் விராட் ஹோலியும் இந்த தொடரில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைவராக புதிய ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply