blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 12, 2014

வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு செப்ரெம்பர் முதல் வாரத்தில்

வடமாகாணத்தின் நீர் வளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான இரண்டு நாள் ஆய்வரங்கு ஒன்றை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு எதிர்வரும் செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில்,

வடக்கு மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நன்னீரின் பயன்பாடு அதிகரித்துச் செல்லும் அதேசமயம் நன்னீருக்கான பற்றாக்குறையும் அதிகரித்துச் செல்கிறது.

மேலும், சூழல் விரோதச் செயற்பாடுகளினால் இருக்கின்ற நீரிலும் மாசுக்கள் கலந்து வருகின்றன.

பூமி வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் வருங்காலங்களில் அதிக வரட்சியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எமது மக்களின் உயிர் ஆதாரமும் விவசாயப் பொருளாதாரத்தின் மூலாதாரமுமான நன்னீர் வளத்தைக் காப்புச செய்து அதனை நிலைபேறான அபிவிருத்தி அடையச் செய்யவேண்டிய பாரிய பொறுப்பு வடக்கு
மாகாணசபையினராகிய எங்களுக்கு உண்டு.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►