blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 3, 2014

ஆறுமுகம் தொண்டமானின் செயற்பாட்டுக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டம் பண்டாரவளை நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட காட்சிகள் நியூஸ் பெஸ்ட் கமெராவில் பதிவாகியது.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும், கால்நடை, கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் சட்டவிதிகளை மீறும் வகையில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன்,  ஊடகவியலாளர் ஒருவரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த காட்சிகளே இவ்வாறு பதிவாகின.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மே தினக் கூட்டத்தில் இவ்வாறாக செயற்பட்டமை குறித்து சுதந்திர ஊடக அமைப்பு அமைப்பாளர் சுசில் ஜெயசேகர கருத்து தெரிவித்தார்.

சுதந்திர ஊடக அமைப்பு அமைப்பாளர் சுசில் ஜெயசேகர :-
“அமைச்சர் தொண்டமான் ஊடகவியலாளர் தொடர்பில் நடந்து கொண்ட விதத்தில் முழு உலகமும் கண்டது. இது மிகவும் மோசமான செயற்பாடாகும். பொது மக்களுக்கு தகவல்களை வழங்கவே ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர்.அந்த தகவல்களினூடாகத்தான் அனைத்து மக்களும்  தாம் வாழும் சூழல் தொடர்பில் அறிந்து கொள்கின்றனர்.ஆகவே ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறிப்பாக அமைச்சர்கள் ஆளுந்தரப்பினர் அவர்களின் உறவினர்களின் அடக்குமுறைகளை நிறுத்தாவிட்டால் மோசமான சூழலே ஏற்படும்.ஆகவே ஊடகவியலாளர்கள் இதற்கு எதிராக செயற்படவேண்டும்.
சுதந்திர ஊடக அமைப்பு என்ற வகையில் இந்த இரண்டு சம்பவங்களையும் கண்டிக்கின்றோம்”

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►