blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 3, 2014

பொல்கொல்ல நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

பொல்கொல்ல நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் திறப்புபொல்கொல்ல – உக்குவளை சுரங்க மார்க்க நுழைவாயிலில் அத்தியாவசிய திருத்தவேலை முன்னெடுக்கப்படுவதை அடுத்து, வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்ல பிரதம பொறியியலாளர் பி.டபிள்யூ.எம்.டபிள்யூ. செனவிரத்ன தெரிவிக்கின்றார்.

இதன் பிரகாரம் நேற்றிரவு 10 மணிமுதல் இன்று மாலை 6 மணிவரை வான் கதவுகள் திறந்தே காணப்படுவதுடன், நீர் விக்டோரியா நீர்த் தேக்கத்திற்கு திருப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த காலப்பகுதிக்குள் பொல்கொல்லயில் இருந்து விக்டோரியா நீர்த் தேக்கம் வரையான நீரேந்து பகுதிகளை பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் பிரதம பொறியியலாளர் எச்சரித்துள்ளார்.

எனவே இந்த பிரதேசங்களில் நீரேந்து பகுதிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►