அரச தாதி உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் அநேகமான வைத்தியசாலைகள் சிலவற்றின்
நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
பிரசவ பயிற்சியினை வழங்குமாறு கோரியே இவர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர்.
இந்த
பிரச்சனை தொடர்பாக சுகாதார அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு
தோல்வியில் முடிவுற்றதனை தொடர்ந்தே இன்று இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்புகாரணமாக இரத்தினபுரி,யாழ்பாணம்,கராப்பிட்டி,தங்காலை,பொலன்னறுவை,அநுராதபுரம்,
மாத்தறை,கலேன்பிந்துனுவெவ,மாத்தளை,களுத்துறை,காலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் தற்போது ஸ்தம்பித நிலைமை ஏற்பட்டுள்ளது.
மாத்தறை,கலேன்பிந்துனுவெவ,மாத்தளை,களுத்துறை,காலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் தற்போது ஸ்தம்பித நிலைமை ஏற்பட்டுள்ளது.
குடும்ப
நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாதி
உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியாசலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில்
பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்பாணம்,இரத்தினபுரி,கராப்பிட்டி,தங்காலை
எல்பிட்டி மற்றுமட் கம்பளை ஆகிய பகுதி வைத்தியசாலைகளிலும்
பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் அவசர பிரிவு கடமைகளில் இருந்தும் இன்று விலகியுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply