blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 11, 2014

சிறையிலிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்; கைதான பொலிஸாருக்கு விளக்கமறியல்

சிறையிலிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்; கைதான பொலிஸாருக்கு விளக்கமறியல்பதுளை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர், நான்கு கான்ஸ்ரபிள்கள், பொலிஸ் உதவியாளர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர் ஆகியோர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த ஐந்தாம் திகதி மீகஹகிவுல கெட்டவத்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐவரை கைது செய்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் பதுளை சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
உடலினுள்  ஏற்பட்ட இரத்தக் கசிவே இவரது மரணத்திற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சம்பவம் தொடர்பில் பதுளை உதவி பொலிஸ் உத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொலிஸார் தம்மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகநபர் உயிரிழப்பதற்கு முன்னதாக சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் அளித்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரத்ன பள்ளேகம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►