இலங்கையில் புகைத்தலால் வருடாந்தம் 21,000 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தினமும் 40 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட 65 பேர் புகைத்தலால் ஏற்படும் நோய்கள் காரணமாக உயிரிழக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புற்று நோயாளர்களில் 60 வீதமானவர்கள் புகைத்தால் ஏற்படுகின்ற புற்று நோய்கள் காரணமாக உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் 450 கோடி ரூபாவை செலவிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply