மாத்தளை பொது வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தாதியர் மற்றும் குடும்ப நல உத்தியோகஸ்தர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக் காரணமாக விசேட பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்றிலிருந்து முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தாதியர் மற்றும் குடும்ப நல உத்தியோகஸ்தர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்ப்பதே பிரதான நோக்கம் என பொலிஸார் கூறினர்.
இதற்கமைய விசேட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலர் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply