எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 11, 2014
கௌரவத்திற்காக காதலர்கள் வெட்டிக் கொலை
இந்திய ஒடிசாவில் குடும்ப கௌரவம் என்ற போர்வையில் காதலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அந்த பெண் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞரை காதலித்து வந்தார்.
திருமணத்திற்கு முதல் நாள் வழங்கப்படும் விருந்துபசார நிகழ்விற்கு அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது தாயும் வந்திருந்தனர். காதல் விவகாரம் தெரியாமல் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
விருந்துபசார நிகழ்வு முடிந்த பின்னர் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஹலாதிபதாராவில் உள்ள தன் காதலன் வீட்டில் அந்த பெண் தங்கியுள்ளார்.
இதனை அறிந்த பெண்ணின் சகோதரர்கள், குறித்த வீட்டிற்கு சென்று அந்த இளைஞரை அச்சுறுத்தியுள்ளனர். பெண்ணை தங்களுடன் வீட்டிற்கு வர அழைத்துள்ளனர்.
பெண் மறுத்ததால், கோபமடைந்த சகோதரர்கள் இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளதோடு, பெண்ணின் தந்தையிடம் இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மைத்திரியை வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனத்தில் ‘மைத்திரி தினவண்ட ஜயவேவா’ என வண்டிகளை காட்சிப்படுத்...
-
சுப்பிரமணியன் சாமியின் வாய் சும்மாவே இருக்காது போல. யாரையாவது கிண்டலடித்தபடியே இருக்கிறார்.
No comments:
Post a Comment
Leave A Reply