blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 11, 2014

யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்புயாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைதடியிலிருந்து கோப்பாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

விபத்தில் பலத்த காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்  சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 25 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►