
உயிரிழந்துள்ள சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
கந்தகெட்டிய பொலிஸ் பிரிவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அண்மையில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சிறைச்சாலையில் உயிரிழந்துள்ள 18 வயதான இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், பதுளை பொது வைத்தியசாலையில் சந்தேகநபர் அனுமதிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தாக்குதலுக்கு தாம் இலக்கானதாக, உயிரிழப்பதற்கு முன்னர் சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் உடலில் காணப்பட்ட காயங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் நீதிமன்றத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தமக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் ,விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply