blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 11, 2014

தென்கொரிய கடலில் விபத்துக்குள்ளான கப்பலின் மீட்பு பணிகள் மீண்டும் முடக்கம்


தென்கொரிய கடலில் விபத்துக்குள்ளான கப்பலின் மீட்பு பணிகள் மீண்டும் முடக்கம்தென்கொரிய கடலில் மூழ்கிய செவொல் கப்பலின் மீட்பு பணிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை மற்றும் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்து. காணப்படுவதால் இன்று மீட்பு பணிகளை தொடர முடியாமல் போகலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

476 பயணிகளுடன் பயணித்த சிவோல் கப்பல் கடந்த மாதம் 16 ஆம் திகதி கடலில் மூழ்கியது.
முற்றாக கடலில் மூழ்கிய கப்பிலிலிருந்து 275 சடலங்கள் மீட்கப்பட்டதுடன்  மேலும் 29 பேரை தேடும் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்தில் 176 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற வானிலை காரணமாக சுழியோடிகளால் நீண்ட நேரம் கடலுக்கடியில் நிலைத்திருக்க முடியவில்லை எனவும் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் சீரற்ற வானிலை காணப்பட்ட போதிலும் மீட்பு பணியாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை சுழியோடியொருவர் மீட்பு பணிகளில் ஈடுபட்ட வேளையில் உயிரிழந்ததை அடுத்து பணிகள் சற்று தாமதமடைவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►