யாழ். மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்
அரியாலையிலிருந்து சாவக்கச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று
கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில்
பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் யாழ். போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தாக பொலிஸார்
தெரிவித்தனர்.
அரியாலை நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, May 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
அளுத்கம நகரிலுள்ள வர்த்தக கடை தொகுதியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன்
-
இலங்கை மருத்துவர் ஒருவரின் மரணம் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply