இலங்கை மருத்துவர் ஒருவரின் மரணம் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மேற்கு அவுஸ்திரேலிய காவல்துறையினர் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இந்தச்சம்பவம் தொடர்பில் மருத்துவரின் மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் 34 வயதான தினேந்தரா அத்துகோரள என்ற மருத்துவரே சந்தேகத்திற்கு இடமான முறையில் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்தhர்.
கடந்த 24ம் திகதி படுகாயமடைந்த நிலையில் வீட்டில் இருந்து பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மருத்துவர் உயிரிழந்தார்.
மேலும் மரணம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளதுடன் மரணம் தொடர்பில் மருத்துவரின் குடும்பத்திற்கும் கொன்சோல் காரியாலயத்திற்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply