blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 27, 2014

வெள்ளவத்தையில் சித்திரவதைக்குள்ளான சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

1364735249Untitled-1பொகவந்தலாவ – கிலா தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர், வெள்ளவத்தை பிரதேச வீடு ஒன்றில் பணி பெண்ணாக சுமார் ஒருவருடகாலம் தொழில் புரிந்து வந்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 15ம் திகதி வீட்டு எஜமானியால் துன்புருத்தப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் பெற்றோர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வீட்டு எஜமானியை கைது செய்தனர்.

பின் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட எஜமானி விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி நேற்று (26.06.2014) கல்கிசை நீதவானிடம் முன்னிலைப்படுத்தபட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►